தாயின் தலையை வெட்டி வீசிய மகள்...குலைநடுங்கி போன போலீஸ்!

நாங்கள் எவ்வளவோ கொலை வழக்குகளை பார்த்துள்ளோம். ஆனால், மகளே தன் தாயின் தலையை வெட்டி வீசும் அளவுக்கு கொடூரமான கொலையை கண்டதில்லை. இவ்வழக்கை விசாரிக்க சிறப்பு உதவியை கோரியுள்ளோம் என்று சிட்டி நகர போலீஸார் தெரிவித்துள்ளனர்
 | 

தாயின் தலையை வெட்டி வீசிய மகள்...குலைநடுங்கி போன போலீஸ்!

ஆஸ்திரேலியாவின் பிரபல நகரமான சிட்னியில் உள்ள செயின்ட் கிளையர் அவென்யு பகுதியில் உள்ள ஓர் குடியிருப்பில் தாயும், மகளும் வசித்து வந்தனர்.

இந்த நிலையில், இருவருக்கும் இடையே ஏதோயொரு பிரச்னை காரணமாக, சனிக்கிழமை இரவு வாக்குவாதம் எழுந்துள்ளது. வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த 25 வயது இளம்பெண், 57 வயது மதிக்கத்தக்க தனது தாயின் தலையை கத்தியால் சீவி, பக்கத்து வீட்டு வாசலில் வீசியுள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார். அப்பெண்ணை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அந்த பெண்ணின் தரப்பில் ஜாமீன் கேட்டு மனு போடப்படாத நிலையில், அந்த சம்பவத்துக்கு பிறகு தமது கைவிரல்களை அசைக்க முடியவில்லை என மட்டும் அந்த பெண் நீதிமன்றத்தில் கூறியுள்ளார். இதையடுத்து, அவருக்கு தேவையான மருத்துவ உதவிகளை அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நாங்கள் எவ்வளவோ கொலை வழக்குகளை பார்த்துள்ளோம். ஆனால், மகளே தன் தாயின் தலையை வெட்டி வீசும் அளவுக்கு கொடூரமான கொலையை கண்டதில்லை. இவ்வழக்கை விசாரிக்க சிறப்பு உதவியை கோரியுள்ளோம் என்று சிட்டி நகர போலீஸார் தெரிவித்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP