துண்டாகிறது ஆப்ரிக்கா... ஆய்வாளர்கள் எச்சரிக்கை

ஆப்ரிக்க கண்டத்தில் பல கி.மீ அளவுக்கு மிகப் பெரிய பிளவு ஏற்பட்டுள்ளது ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
 | 

துண்டாகிறது ஆப்ரிக்கா... ஆய்வாளர்கள் எச்சரிக்கை

துண்டாகிறது ஆப்ரிக்கா... ஆய்வாளர்கள் எச்சரிக்கைஆப்ரிக்க கண்டத்தில் பல கி.மீ அளவுக்கு மிகப் பெரிய பிளவு ஏற்பட்டுள்ளது ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவு மற்றும் புவியியல் மாற்றங்கள் ஆன காரணங்களால் ஏற்பட்ட மிகப்பெரிய நிலப்பிளவு தான் இதற்கு காரணம் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது

கென்யாவின் தென்கிழக்கே இந்த மாற்றம் திடீரென ஏற்பட்டுள்ளது. ஆப்ரிக்க கண்டத்தில் சில பகுதிகளில் ஏற்பட்ட தொடர்  நில அதிர்வு தான் இத்தகைய பிளவுக்கு காரணம். நைரோபி - நரோக் நெடுஞ்சாலை அருகே ஏற்கெனவே பல ஆயிர ஆண்டுகளாக இருந்து வந்த பிளவு,  தற்போது மேலும் அதிகரித்துக் கொண்டே போவதால், விரைவில் ஆப்ரிக்க கண்டமே உடைந்து பிரியும் அபாயம் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

துண்டாகிறது ஆப்ரிக்கா... ஆய்வாளர்கள் எச்சரிக்கை

இது குறித்து லண்டன் பல்கலைக் கழகத்தின் ராயல் ஹாலோவேயின் ஆராய்ச்சியாளர் எழுதியுள்ள கட்டுரையில், "சமீபத்தில் ஆப்பிரிக்க கண்டத்தில் நிலஅதிர்வு ஏற்பட்ட போது, கென்யாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள நைரோபி - நரோக் நெடுஞ்சாலை முழுவதும் பலத்த சேதமடைந்தன.

இந்த நில அதிர்வை தொடர்ந்து வடக்கே ஏடன் வளைகூடா தொடங்கி தெற்கே ஜிம்பாப்வே வரை சுமார் 3000 கி.மீ. தூரத்திற்கு பிளவு ஏற்பட்டுள்ளது. இந்த பிளவு ஆப்பிரிக்க கண்டத்தை சமமற்ற இரு தட்டுகளாக பிரித்துள்ளது. மழை, வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவு உள்ளிட்ட காரணங்களால் இந்த பிளவு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகும் பட்சத்தில் ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளவுபட வாய்ப்பு உள்ளது" என்று கூறியுள்ளார்.

படத்தைப் பார்த்துவிட்டு ஆப்ரிக்க கண்டம் உடனே உடையப்போகிறது என்று நினைத்துவிட வேண்டாம். கண்டம் இரண்டாக பிளந்து, நடுவில் கடல் பரப்பு வர இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP