ஊழல் வழக்கு: மாலத்தீவு முன்னாள் அதிபர் கைது

அப்துல்லா யமீன் அதிபராக இருந்தபோது மாலத்தீவில் உள்ள சிறு தீவுகளில் ஹோட்டல்களை மேம்படுத்துவதற்கு தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. அதில், ஊழல் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 | 

ஊழல் வழக்கு: மாலத்தீவு முன்னாள் அதிபர் கைது

ஹோட்டல் மேம்பாடு திட்டத்தில் ரூ.10 கோடி (இந்திய மதிப்பு) ஊழல் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் மாலத்தீவு முன்னாள் அதிபர் அப்துல்லா யமீன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் பதவியில் இருந்தபோது, இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனா தன் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு பெரும் உதவியாக இருந்தவர் என்று அறியப்பட்டவர். மாலத்தீவில் உள்ள சிறு, சிறு தீவுகளில் ஹோட்டல்களை மேம்படுத்துவதற்கு தனியார் நிறுவனத்துக்கு அப்துல்லாவின் ஆட்சிக்காலத்தில் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. அதில், ஊழல் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக அப்துல்லா யமீனிடம் இரண்டரை மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அதில், முன்னேற்றம் இல்லாத நிலையில், அப்துல்லாவை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சாட்சிகளிடம் பணம் கொடுத்து பிறழ்சாட்சியம் அளிக்குமாறு அப்துல்லா யமீன் மிரட்டல் விடுத்ததாகக் குற்றம்சாட்டினார். இதையடுத்து, அப்துல்லா யமீனை கைது செய்து, விசாரணை முடியும் வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP