பிரேசில் அதிபர் தேர்தலில் சர்ச்சைக்குரிய வேட்பாளர் பொல்ஸனாரோ வெற்றி!

பிரேசில் நாட்டில் வரலாறு காணாத அளவு இடதுசாரி, வலதுசாரி கட்சிகள் மோதிக்கொண்ட அதிபர் தேர்தலில், சர்ச்சைக்குரிய வேட்பாளர் ஜாயர் பொல்ஸனாரோ வெற்றி பெற்று, அடுத்த அதிபராக பதவியேற்கவுள்ளார்.
 | 

பிரேசில் அதிபர் தேர்தலில் சர்ச்சைக்குரிய வேட்பாளர் பொல்ஸனாரோ வெற்றி!

பிரேசில் நாட்டில் வரலாறு காணாத அளவு இடதுசாரி, வலதுசாரி கட்சிகள் கடுமையாக போட்டியிட்ட அதிபர் தேர்தலில், சர்ச்சைக்குரிய வேட்பாளர் ஜாயர் பொல்ஸனாரோ வெற்றி பெற்று, அடுத்த அதிபராக பதவியேற்கவுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளில், பிரேசில் நாட்டில் மிகப்பெரிய அரசியல் பிரளயமே ஏற்பட்டது. தொழிலாளர் கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் தில்மா ரூஸப் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அதன்பின், அவரை அந்நாட்டு நாடாளுமன்றம் பதவி நீக்கம் செய்தது. ரூஸப்பின் துணை அதிபராக இருந்த மைக்கேல் டெமேர் அதிபரானார். கடந்த இரண்டு ஆண்டுகளாக மிக மோசமான நிலையில் இருந்து வருகிறது பிரேசில் நாட்டின் பொருளாதாரம்.

சட்டஒழுங்கும் மிக மோசமாக இருப்பதால், பெரு நகரங்களில் கூட, இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்ல அச்சப்படும் நிலை உள்ளது. இந்நிலையில், கடும் வலதுசாரி வேட்பாளரான ஜாயர் பொல்ஸனாரோவுக்கு பொதுமக்களிடையே பலத்த ஆதரவு எழுந்தது. ஊழல்வாதிகளுக்கும், பிரதான அரசியல்வாதிகளுக்கு அப்பாற்பட்டவர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பொல்ஸனாரோ, பல சர்ச்சைக்குரிய விஷயங்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். முன்னாள் ராணுவ ஆட்சியில் இருந்ததை போல, கைதிகளை சித்தரவதை செய்ய வேண்டும் என்றும், ஒரினச் சேர்க்கையாளர்களை சிறு வயதிலேயே அடித்து திருத்தியிருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். பெண்களுக்கு எதிராகவும் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை பிரச்சாரத்தின் போது பொல்ஸனாரோ கூறினார்.

ஏற்கனவே துப்பாக்கி வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், துப்பாக்கி கலாச்சாரத்தை அதிகரிக்க வேண்டும் என தான் கருதுவதாகவும் அவர் தெரிவித்தார். மக்களின் வாழ்வில் இருந்து அரசின் கட்டுப்பாடுகள் குறைக்கப்பட வேண்டும் என கூறும் அவர், அமேசான் காடுகளில் தனியார் நிறுவனங்கள் தொழிற்சாலைகள், சுரங்கங்கள் அமைக்க அனுமதி அளிக்க விருப்பம் தெரிவித்து வருகிறார். மேலும், உலக வெப்பமயமாதல் என்பதே பொய் என்றும் கூறி வருகிறார்.  

அவரது கருத்துக்களில் பல சர்ச்சைகள் இருந்தாலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போல, உள்ளதை அப்படியே கூறுபவர் என பெரும்பாலான மக்களிடம் பெயரெடுத்துள்ளார் பொல்ஸனாரோ. அதனால், 55% ஓட்டுக்களை பெற்று இடதுசாரி கட்சி வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP