கொலம்பியா- கனமழையால் ஏற்பட்ட நிலச்சாிவில் சிக்கி 14 போ் பலி

கொலம்பியா நாட்டில் பெய்த கன மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிாிழந்துள்ளனா். தென்மேற்குப் பகுதியில் உள்ள கவ்கா என்ற இடத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வந்தது.
 | 

கொலம்பியா- கனமழையால் ஏற்பட்ட நிலச்சாிவில் சிக்கி 14 போ் பலி

கொலம்பியா நாட்டில் பெய்த கன மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிாிழந்துள்ளனா்.

தென்மேற்குப் பகுதியில் உள்ள கவ்கா என்ற இடத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் பான் அமெரிக்கன் நெடுஞ்சாலை அமைந்துள்ள மலைப்பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்ததிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நிலச்சரிவைத் தொடர்ந்து பான் அமெரிக்கன் தேசிய நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை ராணுவ வீரா்கள் மேற்கொண்டுள்ளனா்..

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP