போலந்தில் சாக்லெட் லாரி கவிழ்ந்தது: டன் கணக்கில் சாக்லெட் ஆறாக ஓடிய காட்சி

போலந்து நெடுஞ்சாலையில் சாக்லெட் ஏற்றி சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்ததில் கிட்டத்தட்ட 12 டன் சாக்லெட் சாலையெங்கும் ஆறாக ஓடிய காட்சி இணையத்தில் வைரலாக பரவியது.
 | 

போலந்தில் சாக்லெட் லாரி கவிழ்ந்தது: டன் கணக்கில் சாக்லெட் ஆறாக ஓடிய காட்சி

போலந்தில் சாக்லெட் லாரி கவிழ்ந்தது: டன் கணக்கில் சாக்லெட் ஆறாக ஓடிய காட்சிபோலந்து நெடுஞ்சாலையில் சாக்லெட் ஏற்றி சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்ததில் கிட்டத்தட்ட 12 டன் சாக்லெட் சாலையெங்கும் ஆறாக ஓடிய காட்சி இணையத்தில் வைரலாக பரவியது. 

போலந்து நாட்டில் இருக்கும் வார்ஸாவ் என்ற பகுதியில் டேங்கர் லாரி ஒன்று நேற்று (புதன்கிழமை) இரவு விபத்துக்குள்ளானது.  சாலையில் சென்றபோது, லாரியில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, லாரி சறுக்கிக் கொண்டு சென்றதில், சாலையின் தடுப்புகளில் மோதி மொத்தமாக லாரி தலை குப்புற கவிழ்ந்தது.

இதில் டேங்கரில் திரவ நிலையில் இருந்த சாக்லேட் கலவை முழுக்க சாலையில் கொட்டி ஆறாக ஓடியது. லாரியில் 12 டன் சாக்லெட் நிரப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.  


விபத்தின் காரணமாக சாலை உடனடியாக மூடப்பட்டது. சாலையின் இரண்டு பக்கமும் ஆறாக ஓடிய சாக்லெட் சட்டென உறைந்து போனது. இதனால் சாலை சீரமைப்பு பணி 8 மணி நேரம் முடங்கியது.

சாக்லெட் ஆறுடன் லாரியும் சாலையிலேயே ஒட்டிக் கொண்டு இறுகியதால் அதனை மீட்பதிலும் சிரமம் ஏற்பட்டது. 

இந்த விபத்தினால் அந்த சாக்லேட் நிறுவனத்துக்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP