புத்தாண்டு தினத்தில் பிறந்த குழந்தைகள்; முதலிடம் பிடித்த இந்தியா!

ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியம் முக்கிய ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2019ஆம் ஆண்டின் புத்தாண்டு தினத்தில் உலகம் முழுவதும் 3,95,000க்கும் அதிகமான குழந்தைகள் பிறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 | 

புத்தாண்டு தினத்தில் பிறந்த குழந்தைகள்; முதலிடம் பிடித்த இந்தியா!

ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியம் முக்கிய ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2019ஆம் ஆண்டின் புத்தாண்டு தினத்தில் மட்டும் உலகம் முழுவதும் 3,95,000க்கும் அதிகமான குழந்தைகள் பிறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இதில் இந்தியாவில் மட்டும் சுமார் 70,000 குழந்தைகள் பிறக்கும் என்று கணிக்கப்பட்டது. இந்நிலையில், புத்தாண்டு தினத்தில் உலகம் முழுவதும் 3,95,072 குழந்தைகள் பிறந்துள்ளன. 

இதில் பாதிக்கும் மேலான எண்ணிக்கையை இந்தியா, சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா, வங்கதேசம் உள்ளிட்ட 8 நாடுகள் பெற்றுள்ளன. இந்தியாவில் 69,944 குழந்தைகளும், சீனாவில் 44,940, நைஜீரியாவில் 25,685, பாகிஸ்தானில் 15,112, இந்தோனேசியாவில் 13,256, அமெரிக்காவில் 11,086, காங்கோ குடியரசில் 10,053, வங்கதேசத்தில் 8,428 குழந்தைகள் பிறந்துள்ளதாக பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP