பெரு பேருந்து விபத்தில் பலி எண்ணிக்கை 51 ஆக உயர்வு!

பெரு நாட்டில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் பலி எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது.
 | 

பெரு பேருந்து விபத்தில் பலி எண்ணிக்கை 51 ஆக உயர்வு!


பெரு நாட்டில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் பலி எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. 

பெரு நாட்டின் தலைநகரான லிமாவுக்கு வடக்கே பாசமயோ என்ற மலைப் பிரதேசம் உள்ளது. இதனையொட்டி ஒரு கடற்கரைப்பகுதியும் உள்ளதால் இந்த பகுதியில் விபத்துகள் அடிக்கடி நடப்பதுண்டு. இந்த நிலையில் 58 பயணிகளுடன் பேருந்து ஒன்று அந்த பகுதியில் பயணித்த போது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பின்னர் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மீட்பு பணிதொடங்கியது. ஆனால் கடற்கரை பகுதி என்பதால் பள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது கடினமாக இருந்தது. தொடர்ந்து  ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்புப்பணி நடைபெற்று வருகிறது. 

இந்த விபத்தில் முதலில் 36 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. பெரும்பாலானோருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர். அப்படி சேர்க்கப்பட்ட பலரும் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளனர். இதனால், இன்று காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP