ஊழல் வழக்கில் பிரேசில் நாட்டின் முன்னாள் அதிபர் கைது!

2016 முதல் 2018 வரை, இரண்டு ஆண்டுகள் பிரேசில் நாட்டின் அதிபராக செயல்பட்ட மிக்கெல் டெமெர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து இன்று அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
 | 

ஊழல் வழக்கில் பிரேசில் நாட்டின் முன்னாள் அதிபர் கைது!

2016 முதல் 2018 வரை, இரண்டு ஆண்டுகள் பிரேசில் நாட்டின் அதிபராக செயல்பட்ட மிக்கெல் டெமெர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு, பிரேசில் அதிபர் தில்மா ரூசப் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அவரின் துணை அதிபராக செயல்பட்டு வந்த டெமெர், அதிபராக பதவியேற்றார். இரண்டு ஆண்டுகள் அதிபராக பணியாற்றிய அவர், கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், தற்போதைய அதிபர் பொல்ஸனாரோவிடம் தோல்வி அடைந்தார்.

டெமெர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. பிரேசில் அரசில் நடைபெற்று வந்த பெரும் ஊழல்களை கண்டுபிடிக்க, 'ஆபரேஷன் கார்வாஷ்' என்ற விசாரணை நடைபெற்றது. இதன் முடிவில், முன்னாள் அதிபர் டெமெரை கைது செய்ய நீதிபதி மார்செலோ ப்ரெட்டாஸ் வாரண்ட் பிறப்பித்தார். 

டெமெர் அரசில் பங்காற்றிய முன்னாள் சுரங்கம் மற்றும் எரிவாயு அமைச்சர் மொரெய்ரா  பிராங்கோ, மற்றும் அவருக்கு நெருக்கமான ஓய்வுபெற்ற கர்னல் ஜோ பாப்டிஸ்ட்டா லிமா ஆகியோர் உட்பட 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல்வேறு ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இருந்தாலும், லஞ்சம் வாங்கிய வழக்கில் டெமெர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கட்டுமான நிறுவனத்திடம் சுமார் 2 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியது, நிதிமோசடி, உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களில் அவர் மீது வழக்குகள் நடைபெற்று பிரேசில் வருகின்றன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP