நைஜீரியாவில் போகோ ஹராம் மீண்டும் தாக்குதல்; ராணுவ வீரர்கள், போலீசார் 15 பேர் பலி

நைஜீரியாவில் தொடர் தாக்குதல் நடத்தி வரும் போகோ ஹராம் தீவிரவாதிகள், இன்று ராணுவத்தினர் மீது நடத்திய திடீர் தாக்குதலில், 13 ராணுவ வீரர்களும், 2 போலீஸ் அதிகாரிகளும் கொல்லப்பட்டனர்.
 | 

நைஜீரியாவில் போகோ ஹராம் மீண்டும் தாக்குதல்; ராணுவ வீரர்கள், போலீசார் 15 பேர் பலி

நைஜீரியாவில் தொடர் தாக்குதல் நடத்தி வரும் போகோ ஹராம் தீவிரவாதிகள், இன்று ராணுவத்தினர் மீது நடத்திய திடீர் தாக்குதலில், 13 ராணுவ வீரர்களும், 2 போலீஸ் அதிகாரிகளும் கொல்லப்பட்டனர்.

நைஜீரியாவில் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு, வெடிகுண்டு தாக்குதல், ஆள்கடத்தல் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டுள்ள போகோ ஹராம் தீவிரவாத அமைப்பு, இன்று ராணுவத்தினர் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. அந்நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள, டமட்டுறு- மைடுகுரி சாலையில், ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென மறைந்திருந்த போகோ ஹராம் தீவிரவாதிகள், ராணுவத்தினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதை சற்றும் எதிர்பாராத நிலையில், ராணுவத்தினர் 13 பேரும், போலீஸ் அதிகாரிகள் 2 பேரும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

முன்னதாக நைஜீரியாவின் ராணுவ தளத்தில் போகோஹராம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை, ராணுவம் வெற்றிகரமாக வீழ்த்தியது. இதில் ஒரு ராணுவ வீரர் காயம் அடைந்தார். பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அந்த தாக்குதல் நடைபெற்ற அதே நாளில், ரோந்து பணியில் இருந்த ராணுவத்தினர் மீது மற்றொரு தாக்குதல்நடத்தியுள்ளது போகோ ஹராம்.

கடந்த மாதம் போகோ ஹராம் தீவிரவாதிகள் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருவதாகவும், டிரோன்கள், கூலிப்படைகள் உள்ளிட்ட பல உத்திகளை கையாண்டு, ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவித்திருந்தது.

கடந்த 2009ம் ஆண்டு முதல் நைஜீரியாவை இஸ்லாமிய அடிப்படைவாத நாடாக மாற்ற முயற்சித்து வரும் போகோ ஹராம் தீவிரவாதிகள், இதுவரை 20,000க்கும் மேற்பட்டோரை கொலை செய்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP