உகாண்டாவில் படகு கவிழ்ந்து விபத்து: 30 பேர் உயிரிழப்பு

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள உகாண்டாவில் உள்ள விக்டோரியா ஏரியில் 100 பேருடன் சென்ற படகு கவிழ்ந்த விபத்துக்குள்ளானதில் 30 பேர் பலியாகியுள்ளனர். மேலும் காணாமல் போன பலரை தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
 | 

உகாண்டாவில் படகு கவிழ்ந்து விபத்து: 30 பேர் உயிரிழப்பு

உகாண்டாவில் உள்ள விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காணாமல் போன பலரை தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகிற்னர்.

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள உகாண்டா, கென்யா மற்றும் தான்சானியா நாடுகளை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது தான் விக்டோரியா ஏரி. இதன் பரப்பளவு சுமார் 70 ஆயிரம் சதுர கிலோமீட்டர்.

உகாண்டா நாட்டின் தலைநகர் கம்பாலாவில் உள்ள இந்த விக்டோரியா ஏரியில் நேற்று 100 பேருடன் சென்று உல்லாசப்படகு எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்த அனைவரும் நீரில் தத்தளித்தனர். 

பின்னர் மீட்புப்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் உடனடியாக மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதில் உயிருடன் சிலர் மீட்கப்பட்டனர். அதே நேரத்தில் இதுவரை 30 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் காணாமல் போன பலரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP