பின் லேடனின் கடைசி தொழுகை: மனைவி உருக்கமான பேட்டி!

அமெரிக்கப் படைகள், பின் லேடனை சூழ்ந்த அந்த கடைசித் தருணம் குறித்து அவரது நான்காவது மனைவியான அமால் அல்- சதா புத்தகம் ஒன்றிற்காக பேட்டி அளித்துள்ளார்.
 | 

பின் லேடனின் கடைசி தொழுகை: மனைவி உருக்கமான பேட்டி!

பின் லேடனின் கடைசி தொழுகை: மனைவி உருக்கமான பேட்டி!அமெரிக்கப் படைகள், பின் லேடனை சூழ்ந்த அந்த கடைசித் தருணம் குறித்து அவரது நான்காவது மனைவியான அமால் அல்- சதா புத்தகம் ஒன்றிற்காக பேட்டி அளித்துள்ளார். 

நள்ளிரவில் மின்சாரத்தை துண்டித்துவிட்டு அமெரிக்க படைகள் நுழைந்து பின்லேடனை கொலை செய்ததாக, அவரது நான்காவது மனைவி அமால் கூறியுள்ளார்.

பின் லேடனின் கடைசி தொழுகை: மனைவி உருக்கமான பேட்டி!

அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் 2011ம் ஆண்டு மே முதல் தேதி, அமெரிக்க படைகளால் அவரது பாகிஸ்தானின் அபோட்டாபாத் வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை விமானம் வைத்து தாக்கு ஆயிரக்கணக்கான உயிர் பலியையும் ஏற்படுத்திய  9/11 தாக்குதல் சம்பவத்துக்கு தண்டனையாகவே அல்-கொய்தா இயக்கத்தை அமெரிக்க ஒழித்துக் கட்ட நினைத்தது.

ஆனால், ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டதை அறிவித்த அமெரிக்கா, அது தொடர்பான எந்த விவரத்தையும் இதுவரை வெளியிடவில்லை. 

இந்த நிலையில் அமெரிக்காவில் நடந்த 9/11 தாக்குதலை மையப்படுத்தி ஸ்காட் கிளார்க், அட்ரியன் லெவி ஆகியோர் புத்தகம் எழுதியுள்ளனர். அந்த புத்தகத்திற்காக ஒசாமாவின் 4வது மனைவி அமால் அல்- சதாவிடம் பேட்டி எடுத்துள்ளனர். இந்தப் பேட்டியின் ஒரு பகுதியை அமெரிக்க நாளிதழ் வெளியிட்டுள்ளது. 

அதில் அமால் கூறுகையில்,  "அன்று இரவு உணவு முடிந்ததும் தொழுகை முடித்து ஒசாமாவும் நானும் மேல் மாடியில் இருந்த படுக்கையறைக்கு சென்றுவிட்டோம். இரவு 11 மணியளவில் திடீரென்று மின்சாரம் தடைபட்டது. பாகிஸ்தானில் மின்தடை ஏற்படுவது வழக்கமானது என்பதால், நாங்கள் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நள்ளிரவில் சந்தேகத்துக்குரிய சில சப்தங்கள் கேட்டன. 

மாடியில் பலர் ஏறுவது போல தோன்றியது. தொடர்ந்த சப்தங்களில் அன்னியர் நுழைந்துவிட்டது உறுதியானது. பால்கனியை ஒட்டியிருந்த கதவின் வழியாக பார்த்தபோது அமெரிக்காவின் பிளாக் ஹாக் ஹெலிகாப்டர் வீட்டின் அருகே இருந்தது. சில நிமிடங்களில் மற்றொரு ஹெலிகாப்டரும் வந்துவிட்டது. பின்லேடனின் மற்ற மூன்று மனைவிகளும், குழந்தைகளும் எங்கள் படுக்கையறைக்குள் பதறிக் கொண்டு வந்துவிட்டார்கள். 

அனைவரும் இணைந்து தொழுகையில் ஈடுபட்டோம். அது தான் ஒசாமாவின் கடைசித் தொழுகையாக இருந்தது.பின்னர் எங்களிடம் அவர், 'அவர்கள் கொல்ல விரும்புவது என்னைத்தான் உங்களை அல்ல'' என்று கூறி அனைவரையும் வீட்டின் கீழ்தளத்திற்கு அனுப்பிவிட்டார்.

வீட்டைச் சுற்றி வளைத்தவர்கள் பால்கனிக்குள்ளும் வந்துவிட்டார்கள். அதன்பின் அனைத்துமே முடிந்து விட்டது "  என்று விவரித்துள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP