வங்கதேசம்- தேர்தல் வன்முறையில் 10 பாே் பலி

வங்காளதேசத்தில் ஆளும் அவாமி லீக் கட்சி மற்றும் வங்காளதேச தேசியவாத கட்சி ஆதரவாளர்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் இதுவரை 10 பாே் உயிரிழந்துள்ளனர் . 10 பேர் காயம் அடைந்து உள்ளனர்.
 | 

வங்கதேசம்- தேர்தல் வன்முறையில் 10 பாே் பலி

வங்காளதேச நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட வன்முறைக்கு இதுவரை 10 பாே் உயிரிழந்துள்ளனர்..

வங்காளதேசத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது. இந்த தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் மற்றும் முன்னாள் பிரதமரான கலிதா ஜியா தலைமையிலான வங்காளதேச தேசியவாத கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.

தேர்தலை முன்னிட்டு வன்முறை சம்பவங்களை தடுக்க ராணுவ வீரர்கள், துணை ராணுவ படையினர் உள்ளிட்ட 6 லட்சத்திற்கும் கூடுதலான வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 299 தொகுதிகளில் நடைபெறும் தேர்தலில் ஆயிரத்து 848 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.  10.41 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி வாய்ந்தவர்களாக உள்ளனர்.  

இந்த நிலையில், ஆளும் அவாமி லீக் கட்சி மற்றும் வங்காளதேச தேசியவாத கட்சி  ஆதரவாளர்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டது.  இந்த சம்பவத்தில் இதுவரை 10 பாே் உயிரிழந்துள்ளனர் .  10 பேர் காயம் அடைந்து உள்ளனர்.  தொடர்ந்து போலீசார் பாதுகாப்புடன் அங்கு வாக்கு பதிவு நடந்து வருகிறது.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP