ஓட்டுநர் இன்றி 92 கிலோ மீட்டர் ஓடிய ஆஸ்திரேலிய சரக்கு ரயில்

ஆஸ்திரேலியாவில் சரக்குகளை ஏற்றிச்செல்ல இருந்த ரயில் ஒன்று ஓட்டுநர் இல்லாமலேயே 92 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரயில்வே தடத்தில் சென்ற சம்பவம் அந்நாட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பின் அந்த ரயில் பத்திரமாக நிறுத்தப்பட்டது.
 | 

ஓட்டுநர் இன்றி 92 கிலோ மீட்டர் ஓடிய ஆஸ்திரேலிய சரக்கு ரயில்

ஆளில்லா ரயில்களை இயக்கம் திட்டம் பல நாடுகளில் வகுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் சரக்குகளை ஏற்றிச்செல்ல இருந்த ரயில் ஒன்று, அதன் ஓட்டுநர் இல்லாமலேயே 92 கிலோ மீட்டர் தொலைவுக்கு தானாக தடத்தில் பயணம் செய்துள்ள சம்பவம் அந்நாட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் துறைமுக நகரான பெர்த்தில் பிரமாண்டமான பிஎச்பி சுரங்கம் அமைந்துள்ளது. இந்த சுரங்கத்திலிருந்து ரிமோட் இயக்க மையத்திலிருந்து இரும்புத் தாதுகளை ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில் ஒன்று புறப்படத் தயாராக இருந்தது.  அப்போது ரயில் கேரேஜ்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா என சரிபார்க்க ரயில் ஓட்டுநர் தனது இருக்கையிலிருந்து இறங்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது. பின்பு கட்டுப்பாட்டு அறைக்கு அவர் சென்று திரும்பிவருவதற்குள் திடீரென ரயில் தானாக கிளம்புத் தொடங்கி இருக்கிறது. 

சரியாக வேகமெடுத்து பின் மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் வேகத்தில் சென்ற ரயில் 92 கி.மீ. வரை ஓடியது. அதற்குள் தொலைதூரக் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து தானியங்கி முறையில் ரயிலின் இயக்கம் படிப்படியாகக் கட்டுப்படுத்தப்பட்டு நிறுத்தப்பட்டது. சரியாக ரயில் ஹெட்லேண்ட் துறைமுகத்திற்கு முன்னதாக 119 கி.மீ. தொலைவில் நிறுத்தப்பட்டது. ரயில் தானாக சென்ற காட்சிகள் தானியங்கி கேமராக்கள் மூலம் படமாக்கப்பட்டதும் தற்போது வெளியாகியுள்ளது. 

இந்த ஆண்டு இறுதிக்குள் 'உலகின் முதல் நீண்ட தூர தானியங்கி கனரக சரக்கு ரயில்' போக்குவரத்தை ஆஸ்திரேலியா ரயில்வே செயல்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில் ஆளில்லாமலேயே சரக்கு ரயில் சுரங்கத்திலிருந்து 92 கி.மீ. தொலைவு ஓடிய இச்சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP