ஆஸ்திரேலியா- எஜமானரை குத்தி கொன்ற வளா்ப்பு மான்

ஆஸ்திரேலியாவில் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட மான், எஜமானரை கொம்புகளால் குத்திக் கொன்ற சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 | 

ஆஸ்திரேலியா- எஜமானரை குத்தி கொன்ற வளா்ப்பு மான்

ஆஸ்திரேலியாவில் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட மான், எஜமானரை கொம்புகளால் குத்திக் கொன்ற சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்கு மெல்போர்ன் வங்கராட்டா பகுதியை சேர்ந்த ஒருவர், வெளியே சென்றுவிட்டு தனது வீட்டுக்குள் நுழைந்தபோது, அவர் வளர்த்து வந்த செல்லப்பிராணியான கலப்பு வகை மான், திடீரென அவர் முன் பாய்ந்து கொம்புகளால் குத்தி கொன்றது.

அவருக்கு உதவ வந்த அவரது மனைவியும் இதில் பலத்த காயமடைந்தார். இதை பாா்த்த அவாின் மகன் ஓடி வந்து, கட்டையால் மானை துரத்தி விட்டு தாயாரை வீட்டுக்குள் அழைத்து சென்றான். இது குறித்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார், ஆக்ரோஷத்துடன் அங்குமிங்கும் சுற்றித்திரிந்த மானை சுட்டுக்கொன்றனர்.

மானுக்கு உணவு வைக்க சென்ற போது எஜமானரை மான் குத்தி கொன்றுள்ளது. அவரை காப்பாற்ற சென்ற அவரது மனைவியையும் மான் தாக்கியுள்ளது. படுகாயமடைந்த அவா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசாா் தொிவித்துள்ளனா்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP