மெக்சிகோ தீவில் உள்ள பழங்கால சிறைச்சாலை மூடப்பட்டது

மெக்சிகோ அருகே உள்ள தீவில் செயல்பட்டு வந்த பழங்கால சிறைச்சாலை மூடப்பட்டது. மெக்சிகோ அருகே மரியா தீவில் 1905 ஆண்டு கட்டப்பட்டது.
 | 

மெக்சிகோ தீவில் உள்ள பழங்கால சிறைச்சாலை மூடப்பட்டது

மெக்சிகோ அருகே உள்ள தீவில் செயல்பட்டு வந்த பழங்கால சிறைச்சாலை மூடப்பட்டது. மெக்சிகோ அருகே மரியா தீவில் 1905 ஆண்டு கட்டப்பட்டது.

மெக்சிகோ அருகே 130 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மரியா தீவுகள். இங்கு உள்ள சிறைச்சாலையில் 1905ம் ஆண்டு முதல் 2019 வரை 64 ஆயிரம் கைதிகள் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சிறைச்சாலையில் 1930 ம்ஆண்டு பிரபல எழுத்தாளரும், அரசியல்வாதியுமான ரெவியுல்டாஸ் இரு முறை கைது செய்யப்பட்டு இந்த சிறைச்சலையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் மெக்சிகோவின் புதிய அதிபராக கடந்த பிப்ரவரி மாதம் பதவியேற்ற ஆண்டரஸ் மேனுவேல், மரியா தீவில் உள்ள சிறைச்சாலையை மூட உத்தரவிட்டார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைதியும், இயற்கை அழகு கொஞ்சும் பகுதியாக இந்த தீவு அமைந்துள்ளது. இந்த தீவில் கைதிகள் தண்டனை அனுபவிப்பது சரியல்ல. இந்த சிறைச்சாலையில் உள்ள கைதிகள் மெக்சிகோவில் உள்ள சிறைச்சாலையில் அடைக்க வேண்டும்.

மேலும் இந்த மரியா தீவில் உள்ள சிறைச்சாலைக்கு 1930 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட பிரபல எழுத்தாளரும், அரசியல்வாதியுமான ரெவியுல்டாஸின் பெயர் சூட்டப்படும் என தெரிவித்துள்ளார். தற்போது இந்த சிறையில் கடைசியாக அடைக்கப்பட்டிருந்த 584 கைதிகளும் மெக்சிகோ சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP