சிரியாவில் வான்வழித் தாக்குதல்: குழந்தைகள் உள்பட 50 பேர் பலி

சிரியாவில் ரஷ்ய போர் விமானங்கள் பொழிந்த குண்டுகளில் சிரிய மக்கள் 50 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.
 | 

சிரியாவில் வான்வழித் தாக்குதல்: குழந்தைகள் உள்பட 50 பேர் பலி

சிரியாவில் ரஷ்ய போர் விமானங்கள் பொழிந்த குண்டுகளில் சிரிய மக்கள் 50 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். 

சிரியாவில் சர்தானா மாகாணம் அருகே உள்ள இடிலிப் நகர் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்து வருகிறது. எனவே இந்த நகரை கைப்பற்றும் பொருட்டுரஷ்ய படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தின. வான்வழியாக குண்டு மழை பொழிந்தன. இந்த தாக்குதலில் இதுவரை 50 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.உயிரிழந்தவர்களில் 9 பேர் குழந்தைகள். மேலும்,  60க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளுக்கு இடையே பலர் சிக்கியுள்ளதால், உடல்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என மீட்புப்படையினர் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் தொடர்ந்து தாக்குதல் நடைபெறலாம் எனவும் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP