நிர்வாண திருமணத்தை செய்த விநோத இத்தாலி ஜோடி

இயற்கையை ரசிக்கக் கூடிய தம்பதியினர் இத்தாலியில் உள்ள தீவு ஒன்றில் நிர்வாண நிலையில் திருமணம் செய்துக்கொண்ட செய்தி ஆச்சரியத்தை ஏற்படுவதாக இருக்கிறது.
 | 

நிர்வாண திருமணத்தை செய்த விநோத இத்தாலி ஜோடி

இயற்கையை ரசிக்கக் கூடிய தம்பதியினர் இத்தாலியில் உள்ள தீவு ஒன்றில் நிர்வாண நிலையில் திருமணம் செய்துக்கொண்ட செய்தி ஆச்சரியத்தை ஏற்படுவதாக இருக்கிறது. 

இத்தாலியை சேர்ந்தவர் வேலன்டின் (34). இவரது காதலி ஆன்கா ஆர்சன் (29) இவர் ஒரு பல் மருத்துவர். காதல் ஜோடிகளான இருவரும் சம்பரதாய முறைகளை விரும்பவில்லை, இயற்கை மீதி பிரியம் கொண்ட இவர்கள் நிர்வாணமாக திருமணம் செய்து கொள்ள விரும்பினர். இதனால் இத்தாலியில் உள்ள ஒரு தீவில் நிர்வாண நிலையில் திருமணம் செய்து கொண்டனர். மிகவும் தனிப்பட்ட முறையில் நடந்த இந்த வினோதமான திருமணத்துக்கு இவர்களது நண்பர்கள் 2 பேர் மட்டும் உடனிருந்தனர்.  முற்றிலும் இருத் தரப்பு மத நம்பிக்கைகளையும் தவிர்க்க வேண்டும் என்று நினைத்து  உறவுகள் அனைவரையும் இவர்கள் தவிர்த்துவிட்டனராம். 

திருமணத்தில் கலந்துகொண்ட 2 நண்பர்களும் நிர்வாணமாகவே கலந்து கொண்டனர். மணப்பெண் அணியும் வெள்ளைத்துணியை ஆன்கா தனது தலையில் அணிந்திருந்தார். அதே போல மணமகன் அணியும் டையை மட்டும் வேலன்டின் அணிந்திருந்தார். 

தனது திருமணம் குறித்து மணப்பெண் ஆன்கா ஆர்சன் கூறுகையில், ''எங்கள் நிர்வாண திருமணத்துக்கு பெற்றோர் ஒத்துக் கொள்ளமாட்டார்கள். அதனால்தான் கும்பத்தினர் மற்றும் நண்பர்களை அழைக்காமல் 2 பேரை மட்டுமே அழைத்தோம். இந்த ஆண்டு இறுதியில் இருவரும் முறைப்படி திருமணம் செய்ய இருக்கிறோம். அதற்கு உறவினர்கள் மற்றும் பெற்றோர் அழைக்கபோம். இது எங்கள் மனவிருப்பத்துக்கான திருமணம்'' என்றார்.

ஆனால் இவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைதலங்கில் வைரலாக வளம் வருகின்றன. 

இந்தத் திருமணம் உலகின் எந்த மூலையிலும் இதுவரை நடைபெறாத வகையிலான திருமணம் என இத்தாலி நாட்டு பத்திரிகைகள் குறிப்பிட்டுள்ளன. 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP