வங்கதேச சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியான சோகம்!

வங்கதேசத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியாகியுள்ளது அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சாலை விபத்தில்அதிக உயிரிழப்பு ஏற்படும் நாடுகளில் வங்கதேசமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
 | 

வங்கதேச சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியான சோகம்!

வங்கதேசத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியாகியுள்ளது அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

வங்கதேச நாட்டில் லட்சுமிபூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 137 கிமீ தொலைவில் இன்று ஒரு சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. ஆட்டோ ரிக்ஷா ஒன்று லாரி ட்ரக் மீது மோதியதில் ஆட்டோ டிரைவர் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பலியான 7 பேரில் டிரைவர் தவிர 6 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 

தொடர்ந்து இது தொடர்பாக காவல்துறை விசாரணை செய்து வருகிறது. 

சாலை விபத்தில்அதிக உயிரிழப்பு ஏற்படும் நாடுகளில் வங்கதேசமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. அங்குள்ள சாலைகள் முறையாக பராமரிக்கப்படாததது, போக்குவரத்து விதிமுறைகள் செயல்படுத்தாதது தான் இதுபோன்ற சாலை விபத்துகளுக்கு காரணமாக கூறப்படுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP