காங்கோவில் விமான விபத்து: 6 பேர் பலி!

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் விமானம் விபத்துக்குள்ளானதில் தேர்தல் அதிகாரிகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். தேர்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களும் பத்திரமாக இருப்பதால் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என அதிாரிகள் தெரிவித்துள்ளனர்
 | 

காங்கோவில் விமான விபத்து: 6 பேர் பலி!

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் விமானம் விபத்துக்குள்ளானதில் தேர்தல் அதிகாரிகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

காங்கோவில் தேர்தல்கள் அண்மையில் நடந்தன. வாக்குச்சீட்டு இயந்திரங்கள் பழுது மற்றும் வாக்குச்சீட்டுகள் மாற்றம் உள்ளிட்டவற்றால் சில மையங்களுக்கான தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குச்சீட்டுகள் மட்டும் இயந்திரங்களை விமானம் மூலம் எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்கின்றனர்.

வாக்குச்சீட்டு இயந்திரங்களை கொண்டுவந்து எண்ணிக்கை மையத்தில் ஒப்படைத்துவிட்டு அதிகாரிகள் விமானம் மூலம் புறப்பட்டனர். நாட்டின் இரண்டாவது பெரிய நகரான கின்சாசா அருகே தொழில்நுட்ப கோளாறால் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் தேர்தல் அதிகாரிகள் 5 பேர் மற்றும் பைலட் என 6 பேர் உயிரிழந்தனர்.

தேர்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களும் பத்திரமாக இருப்பதால் தேர்தல் கமிஷன் அறிவித்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP