காங்கோவில் டாங்கர் லாரி வெடித்து 50 பேர் பலி; நூற்றுக்கணக்கானோருக்கு தீக் காயம்

காங்கோவில் டேங்கர் லாரி விபத்துக்கு உள்ளாகி வெடித்து சிதறியதில் 50 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 100 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
 | 

காங்கோவில் டாங்கர் லாரி வெடித்து 50 பேர் பலி; நூற்றுக்கணக்கானோருக்கு தீக் காயம்

காங்கோவில் டேங்கர் லாரி ஒன்று விபத்துக்கு உள்ளாகி வெடித்துச் சிதறியதில் 50 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 100 பேருக்கு பயங்கர தீக்காயம் ஏற்பட்டுள்ளது. 

காங்கோ நாட்டில் உள்ள எம்புடா கிராமம் அருகே அமைந்துள்ள சாலையில் சென்று கொண்டிருந்த எரிபொருள் நிரப்பட்ட டேங்கர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து,  எதிரே வந்த மற்றொரு வாகனத்துடன் அதிவேகத்தில் மோதி விபத்துக்குள்ளாகியது. அதில் டேங்கர் லாரி வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் நடந்தபோது சாலையின் அருகே சென்ற கொண்டிருந்த, வசித்து வந்த பொது மக்களில் 50 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக பேசிய காங்கோ மத்திய மாகாணத்தின் துணை ஆளுநர் அடோவு மடுபுவனா குலுகி, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாகக் கூறியுள்ளார். 

இதனிடேயே இந்த விபத்தில் பலியானவர்களின் உடல்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

காங்கோ நாட்டின் தலைநகர் ப்ராஸாவில்லிருந்து சுமார் 130 கிமீ தொலைவில் உள்ள எம்புடா கிராமத்தில் விபத்து நிகழ்ந்துள்ளது. அதிகளவில் சரக்குகளை ஏற்றி கொண்டு செல்லும் லாரிகள் மற்றும் எண்ணெய் லாரிகள் இந்த நெடுஞ்சாலை வழியே செல்வது வழக்கம் என கூறப்படுகிறது.

உள்நாட்டு பிரச்னை மற்றும் அலட்சியத் தன்மை காரணமாக மத்திய ஆப்பிரிக்க சாலைகள் மிக மோசமான நிலையில் பராமரிக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP