அல்ஜீரியா இசை நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பலி!

அல்ஜீரியாவில் நடைபெற்ற பிரபல இசை நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
 | 

அல்ஜீரியா இசை நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பலி!

அல்ஜீரியாவில் நடைபெற்ற பிரபல இசை நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

தென் அமெரிக்க நாடான அல்ஜீரியாவில் பிரபலமான சோல்கிங் என்பவரின் இசை நிகழ்ச்சி அல்ஜீயர்சில் உள்ள மைதானம் ஒன்றில் நடைபெற்றது. பிரபலமான நிகழ்ச்சி என்பதால் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்துக்கு வெளியே குவிந்தனர். மைதானத்தின் கதவுகள் அனைத்தும் திறக்கப்பட்டதும் ரசிகர்கள் அனைவரும் மேடையை நோக்கி ஓடினர். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஒருவர் பின் ஒருவராக பலர் கீழே விழுந்தனர். இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 21 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP