ஜிம்பாப்வே: பேருந்து விபத்தில் 47 பேர் உயிரிழப்பு

ஜிம்பாப்வே நாட்டில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி நேரிட்ட விபத்தில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது
 | 

ஜிம்பாப்வே: பேருந்து விபத்தில் 47 பேர் உயிரிழப்பு

ஜிம்பாப்வே நாட்டில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி நேரிட்ட விபத்தில் 47 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜிம்பாப்வேயின் தலைநகரான ஹராரேயில் இருந்து ருசாபே நகருக்கு செல்லும் சாலையில், எதிர் எதிரே வந்த இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் உடனடியாக அந்த இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை அதிகாரி பால் நியாதி, இந்த விபத்தில் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.

ஜிம்பாப்வே: பேருந்து விபத்தில் 47 பேர் உயிரிழப்பு

மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP