காங்கோ- தாமிர சுரங்க விபத்தில் 43 பேர் பலி!

காங்கோ நாட்டில் சட்ட விரதோமாக செயல்பட்டு வந்த தாமிரம் வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளனர்.
 | 

காங்கோ- தாமிர சுரங்க விபத்தில் 43 பேர் பலி!

காங்கோ நாட்டில் சட்ட விரதோமாக செயல்பட்டு வந்த தாமிரம் வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில் உள்ள லவுலபா மாகாணத்தில் சட்டவிரோதமாக தாமிர சுரங்கம் செயல்பட்டு வந்தது. இந்த சுரங்கம் சுவிஸர்லாந்தை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.

இந்த சுரங்கத்தில் கடந்த வியாழக்கிழமையன்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது ஏராளமான தொழிலாளர்கள் சுரங்கத்தில் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று வரை சுரங்கத்தில் இருந்து இதுவரை 43 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அவர்களின் உடல்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP