40 'தீவிரவாதிகளை' சுட்டுக் கொன்றது எகிப்து ராணுவம்!

எகிப்தில் சுற்றுலா பேருந்தின் மீது தீவிரவாத தாக்குதல் நடைபெற்றதை தொடர்ந்து, அந்நாட்டு பாதுகாப்பு படையினர் 3 இடங்களில் நடத்திய அதிரடி ரெய்டுகளில், தீவிரவாதிகள் என சந்தேகப்படும் 40 பேரை சுட்டுக் கொன்றது.
 | 

எகிப்தின் பிரபல கீஸா பிரமிட்டுகளை பார்க்க, வியட்நாம் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகளுடன் சென்ற பேருந்தின் மீது நேற்று தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில், 4 பேர் பலியாகினர். அதில் 3 பேர் வியட்நாம் சுற்றுலா பயணிகள் என்றும், மற்றொருவர் எகிப்து நாட்டை சேர்ந்த சுற்றுலா கைடு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தின் ஓட்டுநர் மற்றும் 10 சுற்றுலா பயணிகள் இந்த சம்பவத்தில் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. 

இந்நிலையில், நேற்று இரவு எகிப்து பாதுகாப்பு படையினர், கீஸா மற்றும் சைனை பகுதிகளில், 3 இடங்களில் நடத்திய அதிரடி சோதனையில் தீவிரவாதிகள் என் சந்தேகப்படும் 40 பேரை சுட்டுக் கொன்றது. கீஸாவில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டு வந்த 30 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றதாகவும், வடக்கு சைனையில் 10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP