37 ஆண்டுகளுக்குப் பின் தேர்தல்: 'ஜிம்பாப்வேயின் ஆளும் கட்சிக்கே வெற்றி!'

ஜிம்பாப்வே அதிபர் தேர்தலில் ஆளும் ஷனு-பிஎப் கட்சி அபார வெற்றிப் பெற்றுள்ளது. இருப்பினும் இதனை ஏற்காமல் எதிர்க்கட்சியினர் தங்கள் தரப்பே வெற்றி பெற்றதாக கூறி வருகின்றனர்.
 | 

37 ஆண்டுகளுக்குப் பின் தேர்தல்: 'ஜிம்பாப்வேயின் ஆளும் கட்சிக்கே வெற்றி!'

ஜிம்பாப்வே அதிபர் தேர்தலில் ஆளும் ‌ஷனு-பிஎப் கட்சி அபார வெற்றிப் பெற்றுள்ளது.  இருப்பினும் இதனை ஏற்காமல் எதிர்க்கட்சியினர் தங்கள் தரப்பே வெற்றி பெற்றதாக கூறி வருகின்றனர். 

ஜிம்பாப்வேயில் 34 ஆண்டுகளாக தொடர்ந்து அதிபராக இருந்த ராபர்ட் முகாபே பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக எம்மர்சன் நங்காக்வா (72) புதிய அதிபரானார். பின் அதனை அடுத்து அங்கு அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் நடந்த தேர்தலில் அதிபர் நங்காக்வா ‌ஷனு-பிஎப் கட்சி சார்பிலும், நெல்சன் சமீசா எதிர்க்கட்சிகளின் எம்.டி.சி. கூட்டணி கட்சிகளின் சார்பிலும் போட்டியிட்டனர்.

மேலும் 21 சுயேட்சைகளும் தேர்தலில் பங்கேற்றனர்.  இந்த நிலையில் தேர்தலில் ஆளும் கட்சியான ‌ஷனு-பிஎப் வேட்பாளர்கள் பெருமளவில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இருப்பினும் எதிர்க்கட்சியினர் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்து விட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர். 

மேலும் எதிர்க் கட்சி வேட்பாளரே வெற்றி பெற்றதாக அறிவித்தனர். இதனால் முடிவை அறிவிப்பதில் தேர்தல் கமி‌ஷனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  இருப்பினும் ஆளும் ‌ஷனு-பிஎப் கட்சி வெற்றி பெற்றதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித தரப்பு தலைநகர் ஹராரே உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதனால் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி தொண்டர்களிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே ஜிம்பாப்வே முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஜிம்பாப்வே 1980-ல் சுதந்திரம் அடைந்தது. பின் 1980ஆம்  ஆண்டில் ஜிம்பாப்வே ஆப்பிரிக்க தேசிய கூட்டமைப்பு கட்சியை ராபர்ட் முகாபே தொடங்கினார். கடந்த 1987-ல் ஜிம்பாப்வே ஆப்பிரிக்க மக்கள் கூட்டமைப்பு (இசட்.ஏ.பி.யு) கட்சி முகாபே கட்சியுடன் இணைந்தது.

சுமார் 37 ஆண்டுகள் ஜிம்பாப்வே நாட்டை ஆண்ட முகாபே, துணை அதிபர் எம்மர்சனை அண்மையில் பதவி நீக்கம் செய்துவிட்டு தனது மனைவி கிரேஸை (52) அடுத்த அதிபராக்க முயற்சி செய்தார். இதற்கு ராணுவ தளபதி கான்ஸ்டன்டினோ சிவெங்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். 

கடந்த வருடம் நவம்பர் 15-ம் தேதி ஆட்சி, அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. 93 வயதாகும் அதிபர் முகாபே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். ஜிம்பாப்வே நாட்டில் வறுமை, வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வரும் நிலையில் முகாபே பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஆளும் ஜனு பி.எப். கட்சித் தலைவர்களே போர்க்கொடி உயர்த்தியது நினைவிருக்கலாம். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP