30 நிமிடங்கள் முன்னோக்கிய வட கொரியா!

தென் கொரியவின் நேரத்திற்கு நிகராக, வட கொரியா தனது நேர மண்டலத்தை 30 நிமிடங்கள் முன் நொகி மாற்றி அமைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.
 | 

30 நிமிடங்கள் முன்னோக்கிய வட கொரியா!

தென் கொரியவின் நேரத்திற்கு நிகராக, வட கொரியா தனது நேர மண்டலத்தை 30 நிமிடங்கள் முன்னோக்கி மாற்றி அமைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

கொரிய நாடுகள் இடையே நிலவி வந்த 65 ஆண்டு கால பகை சமீபத்தில் முடிவுக்கு வந்தது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்,. தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் ஆகியோர் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தை நல்லப் பலனை அளித்துள்ளதை அடுத்து இவர்கள் இருவரும் விரைவில் அமெரிக்க அதிபர்  ட்ரம்ப்பையும் சந்தித்து பேச இருக்கிறார். 

30 நிமிடங்கள் முன்னோக்கிய வட கொரியா!

பழைய தென்கொரிய நேரம் (இடது), வடகொரிய நேரம் (வலது) 

பல உடன்படுக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட உள்ள நிலையில் முதற்கட்டமாக நேர மண்டலத்தை ஓரே மாதிரியாக மாற்றுவது தொடர்பாக பேசப்பட்டது. தென்கொரியாவின் நேரத்தை விட வடகொரியா அரை மணி நேரம் பின்னோக்கி இருந்தது.

தற்போது, வடகொரியா தனக்கென இருந்த நேர மண்டலத்தை தற்போது விட்டுக்கொடுத்துள்ளது. தென்கொரிய நேரத்திற்கு இணையாக, வடகொரிய நேரம் அரை மணிநேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இனி இரு கொரிய நாடுகளுக்கும் ஒரே நேர மண்டலம் தான் பொதுவாக இருக்கும். நேற்று நள்ளிரவு முதல் இந்த மாற்றம் அமலுக்கு வந்தது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP