ஆப்கானிஸ்தானில் தங்க சுரங்கத்தில் நிலச்சரிவு- 30 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டதால் தங்கச்சுரங்கத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த 30 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்துள்ளனர். மீட்புக்குழுவினர், உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
 | 

ஆப்கானிஸ்தானில் தங்க சுரங்கத்தில் நிலச்சரிவு- 30 பேர் பலி


ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டதால் தங்கச்சுரங்கத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த 30 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்துள்ளனர்.

வடக்கு ஆப்கானிஸ்தான் நாட்டில் கோஹிஸ்தான் மாவட்டத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 200 அடிஆழம் கொண்ட அந்த சுரங்கத்தின் உள்ளே ஆற்று படுகையில் கிராம மக்கள் சட்டத்திற்கு புறம்பாக தங்கம் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். குகை வடிவிலான அந்த குகையில் ஏராளமான தொழிலாளர்கள் அந்த பணியில் இருந்தனர். கடும் பனிப்பாெழிவால் அப்போது எதிர்பாராத விதமாக நிலச்சரிவு ஏற்பட்டது.

விபத்தில் உள்ளே சுரங்கம் தோண்டும் பணியில் இருந்த தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். மண் சரிந்து விழுந்ததில் 30 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.

மற்றவர்களின் நிலைமை என்ன என்பது இதுவரை தெரியவில்லை. விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர், உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். மருத்துவ உதவிக்குழுவும் விரைவாக அங்கு அனுப்பப்பட்டுள்ளது.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP