எகிப்தில் அதிரடி ராணுவத் தாக்குதலில் 30 ஐ.எஸ் தீவிரவாதிகள் பலி

மத்திய மற்றும் தெற்கு சினாய் தீபகற்பத்தில் ராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதலில் 30 ஐ.எஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
 | 

எகிப்தில் அதிரடி ராணுவத் தாக்குதலில் 30 ஐ.எஸ் தீவிரவாதிகள் பலி

எகிப்தில் அதிரடி ராணுவத் தாக்குதலில் 30 ஐ.எஸ் தீவிரவாதிகள் பலிமத்திய மற்றும் தெற்கு சினாய் தீபகற்பத்தில்  ராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதலில் 30 ஐ.எஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் 173 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதாகவும் எகிப்து தெரிவித்துள்ளது.

தீவிரவாதிகள் பதுங்கியுள்ள சினாய் தீபகற்பத்தில் அதிரடித் தாக்குதல் நடத்தி அவர்களை வேட்டையாட எகிப்து ராணுவம் திட்டமிட்டது. அதன்படி ராணுவத்தினரும் போலீஸும் இணைந்து தீவிரவாதிகளின் பதுங்குமிடங்களில் புகுந்து அதிரடித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் 30 ஐ.எஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 173 பயங்கரவாதிகள் குண்டு காயத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர். ராணுவத் தரப்பில் 3 வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களது பதுங்குமிடத்திலிருந்து ஏராளமான ஆயுதங்கள் வெடிப்பொருள்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்தி வந்த பல்வேறு வாகனங்களும் கைப்பற்றப்பட்டன.

இதன் மூலம் தெற்கு மற்றும் மத்திய சினாய் தீபகற்பப் பகுதியில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டப்பட்டுவிட்டதாக எகிப்து ராணுவம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வடக்கு சினாய் பகுதியில் ராணுவம் களமிறங்க ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எகிப்தில் அதிபருக்கு எதிராக உள்நாட்டுப் புரட்சி ஏற்பட்ட பின்னர் சினாய் தீபகற்பத்தில் ஐ.எஸ் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகமாகியுள்ளது. இஸ்லாமிய ஆதரவு முகமது மோர்ஸி பதவி பறிக்கப்பட்டதை அடுத்து தீவிரவாத தாக்குதல்கள் அங்கு அதிகரித்தது. இதனால் ராணுவ தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டது.  நூற்றுக்கணக்கான உயிர் பலிகளையும் சேதங்களையும் சந்தித்தது ராணுவம். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP