பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி பாரிஸில் போராட்டம்: 288 பேர் கைது!

பிரான்ஸ் நாட்டில் பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை கண்டித்து, பாரிஸ் நகரில் மிகப்பெரும் போராட்டம் நடைபெற்றதையொட்டி, அவர்களில் 288 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 | 

பிரான்ஸ் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து, அதனை கண்டித்து பாரிஸ் நகரில் நேற்று அரசை எதிர்த்து மாபெரும் போராட்டம் நடைபெற்றது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களுக்கு அரசு கூடுதல் வரி விதிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டி கோஷமிட்டனர். இதையடுத்து போராட்டக்காரர்களை கலைக்கக் காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்ததோடு கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் வீச நேரிட்டது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 288 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து பேசியுள்ள அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், "நியாயமான கோபத்தை சட்டரீதியாக அவர்கள் வெளிப்படுத்த வேண்டும்.அதைவிட்டுவிட்டு வன்முறையில் ஈடுபடுவது சரியல்ல. மக்களின் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் இவ்வாறு போராட்டம் நடத்தக்கூடாது என்று பேசியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP