நைஜீரிய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 26 பேர் பலி

நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள ஸம்ஃபரா மாகாணத்தில், ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள், பல்வேறு கிராமங்களுக்கு தீவைத்து நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில், பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர்.
 | 

ஸம்ஃபராவின் மடா என்ற பகுதியில், உள்ள 7 கிராமங்களுக்கு வந்த ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள், சரமாரியாக துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர்.  இந்த தாக்குதல்களில் 15 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், அதே மாகாணத்திலுள்ள பட்டவுனா கிராமத்திற்கும், துப்பாக்கியுடன் வந்த தீவிரவாதிகள், 11 பேரை கொலை செய்து, அங்குள்ள வீடுகளுக்கு தீ வைத்துச் சென்றனர். இதுபோக, 6 பெண்கள் உட்பட 7 பேரை, மர்ம நபர்கள் கடத்திச் சென்றுள்ளனர். 

இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும், அப்பகுதியில் வேறு தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனரா என்பது குறித்து விசாரித்து வருவதாகவும், நைஜீரிய காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக இந்த பகுதியில் தொடர்ந்து இதுபோன்ற துப்பாக்கி தாக்குதல் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP