இந்திய ரூபாய் நோட்டுகள் ரூ.2,000, 500 மற்றும் 200 செல்லாது: நேபாள அரசு அதிரடி!

இந்திய அரசு சமீபத்தில் புதிதாக வெளியிட்டுள்ள 2000, 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் நேபாளத்தில் செல்லாது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. தற்போது 2020ம் ஆண்டு 'நேபாள் ஆண்டு' என பிரம்மாண்டமாக கொண்டாடப்பட உள்ளது.
 | 

இந்திய ரூபாய் நோட்டுகள் ரூ.2,000, 500 மற்றும் 200 செல்லாது: நேபாள அரசு அதிரடி!

இந்திய அரசு சமீபத்தில் புதிதாக வெளியிட்டுள்ள 2000, 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் நேபாளத்தில் செல்லாது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 

இந்தியாவில் உபயோகிக்கப்படும் பணம் தான் நேபாளத்திலும் கரன்சியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது  2020ம் ஆண்டு 'நேபாள் ஆண்டு' என பிரம்மாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. 

இதையடுத்து, இந்திய அரசு சமீபத்தில் புதிதாக வெளியிட்டுள்ள 2000, 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் இனி நேபாளத்தில் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது அங்கு வேலை செய்யும் இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதற்கு காரணம் என்னவென்றும் அந்நாட்டு அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. அதாவது, 2020ல் நேபாள் ஆண்டு கொண்டாடப்பட இருப்பதையடுத்து, அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கிட்டத்தட்ட 20 லட்சம் இந்தியர்கள் வருவார்கள். எனவே அந்த நேரத்தில் வருமானத்தை பெருக்கும் நோக்கமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நேபாள அரசு அறிவித்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP