தென்கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் காலராவால் 1700 பேர் பாதிப்பு

இடாய் புயல் பாதிப்புக்குள்ளான மொசாம்பிக், மாலவி, ஜிம்பாப்வே நாடுகளில் காலரா நோயால் சுமார் 1700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 | 

தென்கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் காலராவால் 1700 பேர் பாதிப்பு

இடாய் புயல் பாதிப்புக்குள்ளான மொசாம்பிக், மாலவி, ஜிம்பாப்வே நாடுகளில் காலரா நோயால் சுமார் 1700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 14ம் தேதி, இடாய் புயலின் கோரதாண்டவத்தில் சிக்கி இந்த நாடுகளை சேர்ந்த சுமார் 700 பேர் உயிரிழந்தனர். வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக முகாம்களில் பலர் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், காலரா உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவ ஆரம்பித்துள்ளது.

இந்தநிலையில் காலரா நோய்க்கு 3 பேர் உயிரிழந்ததாகவும், குழந்தைகள் உட்பட 1700 பேர் பாதிப்பிக்குள்ளாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவசர நடவடிக்கையாக சுகாதாரத்துறை அதிகாரிகள் 6 நாட்களுக்கு தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தியுள்ளனர். பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளித்து சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP