ஈரானில் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கியதில் 15 பேர் பலி

ஈரானில் சரக்கு விமானம் ஒன்று நொறுங்கி விழுந்ததில் 15 பேர் பலியாகியுள்ளனர். ஒருவர் மட்டும் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார். மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
 | 

ஈரானில் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கியதில் 15 பேர் பலி

ஈரானில் சரக்கு விமானம் ஒன்று நொறுங்கி விழுந்ததில் பலியானவ்ர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. 

கிர்கிஸ்தான் நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான 'போயிங் 707' என்ற சரக்கு விமானம் பிஷ்கெக் நகரில் இருந்து இறைச்சியை ஏற்றிக்கொண்டு ஈரானுக்கு புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் விமானி உள்பட 16 பேர் பயணித்தனர். டெஹ்ரானில் பாத் விமான நிலையத்துக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து குடியிருப்புப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.

இதையடுத்து, விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஒருவர் மட்டும் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார். மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP