நைஜிரியா- கூட்ட நெரிசலில் சிக்கி 14 பேர் பலி

நைஜிரியாவின் துறைமுக நகரில் அதிபர் முகமது புகாரியின் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர்.
 | 

நைஜிரியா- கூட்ட நெரிசலில் சிக்கி 14 பேர் பலி

நைஜிரியாவின் துறைமுக நகரில் அதிபர் முகமது புகாரி உரையாற்றிய பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர்.

பொதுதேர்தலையொட்டி பிரச்சாரத்தில் புகாரி ஈடுபட்டிருந்த போது அவரை நேரிலும், அருகில் சென்றும் காண விரும்பி கூட்டத்திற்கு வந்திருந்து பொதுமக்கள் மேடையை நோக்கி ஒரு நேரத்தில் சென்றபோது கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அதையடுத்து ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 14 பேர் சம்பவ இடத்திலேயே சிக்கி உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் காயமடைந்த நிலையில் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

நெரிசல் குறித்து அறிந்த அதிபர் முகமது புகாரி மிகுந்த வேதனையடைந்திருப்பதாக அதிபர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP