லிபியாவில் 12 ஐ.எஸ் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

லிபிய ராணுவ கூட்டுப்படைகளுக்கும், ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த தாக்குதலில் 12 ஐ.எஸ் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். முன்னதாக நேற்று இதே பகுதியில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
 | 

லிபியாவில் 12  ஐ.எஸ் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

லிபிய ராணுவ கூட்டுப்படைகளுக்கும், ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த தாக்குதலில் 12 ஐ.எஸ் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். 

லிபியா நாட்டில் டாஸிர்பு என்ற நகரத்தில் இன்று லிபிய ராணுவ கூட்டுப்படைகள், ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் 12 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், தீவிரவாதிகளின் வாகனங்களும் எரிக்கப்பட்டன. 

முன்னதாக நேற்று இதே பகுதியில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இப்பகுதியில் ஒரு காவல் நிலையத்தை தாக்கியுள்ளனர். மேலும் அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பொது மக்களில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சுமார் 15க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர். 

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே தீவிரவாதிகள் மீது ராணுவப்படையினர் இன்று தாக்குதல் நடத்தியுள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP