ஆஸ்திரேலியாவில் 92 வயது பாட்டியை அடித்ததாக 102 வயது தாத்தா கைது 

ஆஸ்திரேலியாவில் முதியோர் இல்லம் ஒன்றில் 92 வயது பாட்டி ஒருவரை 102 வயது தாத்தா அடித்ததாக குற்றச்சாட்டு வந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டது ஆஸ்திரேலியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

ஆஸ்திரேலியாவில் 92 வயது பாட்டியை அடித்ததாக 102 வயது தாத்தா கைது 

ஆஸ்திரேலியாவில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் 92 வயது பாட்டி ஒருவரை 102 வயது தாத்தா அடித்ததாக குற்றச்சாட்டு வந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். 

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி போன்டி கடற்கரைக்கு முதியோர் இல்லம் உள்ளது. இங்கு மதிய உணவு நேரத்தின் போது திடீரென அங்கிருந்த 92 வயது பாட்டி ஒருவருக்கும் 102 வயது தாத்தாவுக்கும் இடையே சில தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த தாத்தா, பாட்டியை அடித்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் முதியோர் இல்லத்துக்கு சிட்னி போலீசார் விரைந்தனர். 

அடித்ததாக குற்றம்சாட்டப்பட்ட தாத்தாவை போலீசார் கைத்தாங்கலாக கூட்டிச் சென்று கைது செய்தனர். பின்னர், அவரிடம் வாக்குமூலம் பெற்று விடுவித்தனர். மேலும், அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜராகவும் அவருக்கு உத்தரவிடப்பட்டது. 

இதில் பாதிப்புக்குள்ளான பாட்டி என்ன ஆனார், எதற்கு இந்த சண்டை நடந்தது என்பது குறித்த தகவலை போலீசார் வெளியிட மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் 92 வயது பாட்டியை அடித்தாக 102 வயது தாத்தா கைது செய்யப்பட்டது ஆஸ்திரேலியாவிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. ஆஸ்திரேலியாவில் முதியோர் இது போல கைது செய்யப்பட்டது இதுதான் முதன்முறை என அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP