சவுதியில் மீண்டும் இளவரசர்கள் கைது!

சலுகை பறிப்பைக் கண்டித்துச் சவுதி மன்னர் அரண்மனை முன்பு போராட்டம் நடத்த முயன்ற 11 இளவரசர்கள் கைது செய்யப்பட்டனர்.
 | 

சவுதியில் மீண்டும் இளவரசர்கள் கைது!

சலுகை பறிப்பைக் கண்டித்துச் சவுதி மன்னர் அரண்மனை முன்பு போராட்டம் நடத்த முயன்ற 11 இளவரசர்கள் கைது செய்யப்பட்டனர். 

சவுதி அரேபியாவில் சில மாதங்களுக்கு முன்பு ஊழல் குற்றச்சாட்டின் கீழ் ஏராளமான இளவரசர்கள் கைது செய்யப்பட்டனர். சொகுசு ஹோட்டல்களில் அடைக்கப்பட்ட இவர்கள், ஊழல் செய்து சேர்த்த பணத்தைத் திரும்ப ஒப்படைத்ததும் விடுதலை செய்யப்பட்டனர். இளவரசர்கள் மீது தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

தற்போது சவுதி அரேபியாவில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இளவரசர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரம், குடிநீர் கட்ட சலுகை ரத்து செய்யப்பட்டது. இதனால் கொதிப்படைந்த 11 இளைஞர்கள் திடீரென்று மன்னர் அரண்மனை முன்பு ஒன்று கூடினர். அவர்களைக் கலைந்து செல்லும்படி போலீசார் எச்சரித்தனர். ஆனால், அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதனைத் தொடர்ந்து 11 இளவரசர்களையும் போலீஸ் கைது செய்து நிஜ சிறையில் அடைத்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

11 இளவரசர்கள் மீது சட்டப்படி விசாரணை நடத்தப்பட்டுத் தண்டனை வழங்கப்படும். சட்டத்தின் முன்பு அனைவரும் சமம், தவறு செய்தால் தண்டனைப் பெற்றே தீர வேண்டும் என்று ரியாத் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அரண்மனை முன்பு இளவரசர்கள் போராடுவதற்காக ஒன்று திரண்டது மிகவும் பரபரப்பான செய்தியாகப் பார்க்கப்படுகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP