ஆமா...எங்க நாட்டுல பயங்கரவாதிகள் இருக்காங்க தான்... பகிரங்கமாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் பிரதமர்!

பாகிஸ்தானில் 40 பயங்கரவாத அமைப்புகள் இன்னமும் இயங்கி கொண்டு தான் இருக்கின்றன. இவர்களையும் பாகிஸ்தான் அரசு விரைவில் தீர்த்துக் கட்டும் என இம்ரான் கான் பகிரங்கமாக கூறியுள்ளார்.
 | 

ஆமா...எங்க நாட்டுல பயங்கரவாதிகள் இருக்காங்க தான்... பகிரங்கமாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் பிரதமர்!

 பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். தலைநகர் வாஷிங்டனில் தன்னார்வ அமைப்பின் சார்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியது:

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவப் பள்ளியில், கடந்த 2014- இல் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 150 மாணவர்கள் கொல்லப்பட்டனர். உலகையே உலுக்கிய இக்கொடூர சம்பவத்துக்கு பிறகுதான் பயங்கரவாதத்துக்கு சமாதி கட்ட வேண்டுமென அப்போதைய பாகிஸ்தான் அரசுக்கு உறைத்தது. ஆனாலும் அதற்கான தைரியம் ஆட்சியாளர்களிடம் இல்லாததால், பாகிஸ்தானின் பெரும் பிரச்னையாக இருந்துவந்த பயங்கரவாதத்தை அப்போதும் வேரறுக்க முடியவில்லை.

ஆனால், எனது தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, பாகிஸ்தான் மண்ணிலிருந்து பயங்கரவாதத்தை முற்றிலும் விரட்டியடிக்க தொடர் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இருப்பினும், 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரையிலான பயங்கரவாதிகளும், 40 பயங்கரவாத அமைப்புகளும் பாகிஸ்தானில் இயங்கி கொண்டு தான் இருக்கின்றன. இவர்கள் ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஜம்மு -காஷ்மீரில் பயங்கரவாத செயல்களை மேற்கொள்ள பயிற்சி அளிக்கப்பட்டவர்கள். இவர்களையும் பாகிஸ்தான் அரசு விரைவில் தீர்த்துக் கட்டும் என இம்ரான் கான்  பகிரங்கமாக கூறியுள்ளார்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடமாக உள்ளதென இந்தியா சொல்லும்போதெல்லாம், இல்லை...அப்படி இல்லை... என பாகிஸ்தான் மறுத்து தான் வந்துள்ளது. ஆனால், முதல்முறையாக அங்கு பல்லாயிரக்கணக்கான  பயங்கரவாதிகள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என அந்ந நாட்டின் பிரதமரே தற்போது ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP