யாருக்காக வேலை செய்கிறீர்கள்? நிருபரிடம் கொந்தளித்த பாகிஸ்தான் அமைச்சர் குரேஷி!!

யாருக்காக வேலை செய்கிறீர்கள்? உங்களுக்கு தோன்றுவதை நீங்களே எழுதிக் கொள்ளுங்கள். என்னிடம் ஏன் கோட்கிறீர்கள் ? என தொலைகாட்சி நிகழ்ச்சியில், நிருபரிடம் கோபமாக கேள்வியெழுப்பியுள்ளார் பாகிஸ்தான் அயலுறவுத்துறை அமைச்சர் ஷா முஹம்மது குரேஷி
 | 

யாருக்காக வேலை செய்கிறீர்கள்? நிருபரிடம் கொந்தளித்த பாகிஸ்தான் அமைச்சர் குரேஷி!!

யாருக்காக வேலை செய்கிறீர்கள்? உங்களுக்கு தோன்றுவதை நீங்களே எழுதிக் கொள்ளுங்கள். என்னிடம் ஏன் கோட்கிறீர்கள் ? என தொலைகாட்சி நிகழ்ச்சியில், நிருபரிடம் கோபமாக கேள்வியெழுப்பியுள்ளார் பாகிஸ்தான் அயலுறவுத்துறை அமைச்சர் ஷா முஹம்மது குரேஷி.

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு 58 நாடுகளின் ஆதரவு இருப்பதாக பிரதமர் இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்ததை தொடர்ந்து, பாகிஸ்தான் அயலுறவுத்துறை அமைச்சர் முஹம்மது குரேஷியும் அதற்கு ஆதரவு தெரிவித்திருந்தார். சமீபத்தில், பாகிஸ்தான் தொலைகாட்சி சேனலின் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட குரேஷியிடம் இது தொடர்பான கேள்வி ஒன்று முன் வைக்கப்பட்டது. அந்த கேள்வியினால் ஆத்திரமடைந்த அவர், "நான் பதிவு செய்த பதிவிலிருந்து  மட்டுமே என்னிடம் கேள்வியெழுப்ப வேண்டும். பிரதமரின் பதிவுகள் குறித்து அவரிடம் கேளுங்கள். நீங்கள் யாருக்காக வேலை செய்கிறீர்கள்? உங்களுக்கு தோன்றுவதை தான் நீங்கள் எழுத போகிறீர்கள். பின்பு எதற்காக என்னிடம் கேட்கிறீர்கள்" என கோபமாக கேள்வியெழுப்பியுள்ளார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP