என்ன வியப்பு... பயங்கரவாதி ஹபீஸ் சையதை கைது செய்துள்ள பாகிஸ்தான்!

மும்பையில் கடந்த 2008 -இல் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட, ஜாமத் -உத் -தாவா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையதை, பாகிஸ்தானின் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் லாகூரில் இன்று கைது செய்தனர்.
 | 

பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளித்து வந்தது, பண மோசடியில் ஈடுபட்டு வந்தது ஆகிய காரணங்களுக்காக ஹபீஸ் சையது கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டது தொடர்பாக, பாகிஸ்தானில் இவர் மீது 23 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பதும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை அடுத்த வாரம் சந்திக்க உள்ள நிலையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியா குரலுக்கு சர்வதேச அளவில் கிடைத்துள்ள மற்றொரு வெற்றியாகவே, ஹபீஸ் சையதின் கைது கருதப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP