விழிப்புடன் இருக்கிறோம்: பல்பு வாங்கிய பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை

பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகள் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்கு முன், 'நாங்கள் விழிப்புடன் இருக்கிறோம்' என பாகிஸ்தான் பாதுகாப்புதுறை பதிவிட்ட ட்வீட்டை நெட்டிசங்கள் கலாய்த்து வருகின்றனர்.
 | 

விழிப்புடன் இருக்கிறோம்: பல்பு வாங்கிய பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை

பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகள் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்கு முன், 'நாங்கள் விழிப்புடன் இருக்கிறோம்' என பாகிஸ்தான் பாதுகாப்புதுறை பதிவிட்ட ட்வீட்டை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். 

புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானபடை இன்று அதிகாலை பாகிஸ்தானில், ஜெய்ஷ்- ஈ- முஹம்மது தீவிரவாதிகள் பதுங்கியிருந்த பல்வேறு இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், சுமார் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து வெறும் 200கிமீ தொலைவில் உள்ள பாலகோட்டில் ஜெயிஷ் அமைப்பின் பயிற்சி கூடங்கள் மீது இந்திய விமானபடை குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியது. ஆனால், பாகிஸ்தான் அரசோ, ஆளில்லாத காட்டுப் பகுதியிலேயே இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதாக, மறுப்பு தெரிவித்து வருகிறது.

எனினும், இந்த தாக்குதல் நடப்பதற்கு சில மணி நேரங்கள் முன்னதாக, பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை வெளியிட்ட ட்வீட் ஒன்று, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி, நேற்று இரவு பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை, ஒரு போர்விமானத்தின் புகைப்படத்தை பகிர்ந்து, "நிம்மதியாக தூங்குங்கள். பாகிஸ்தான் விமானப்படை உங்களுக்காக விழித்திருக்கிறது" என கூறியிருந்தது.

விழிப்புடன் இருக்கிறோம்: பல்பு வாங்கிய பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை

அடுத்த சில மணி நேரங்களிலேயே, இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தி எந்த சேதமும் இல்லாமல் திரும்பிய நிலையில், நெட்டிசன்கள் இந்த ட்வீட்டை மீம் பொருளாக்கி கலாய்த்து வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP