புல்வாமா தாக்குதலில் எங்களுக்கு தொடர்பில்லை - வல்லரசு நாடுகளிடம் பாகிஸ்தான் விளக்கம்

புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ள நிலையில், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் வீட்டோ அதிகாரம் கொண்ட வல்லரசு நாடுகளின் தூதர்களிடம் அந்தக் குற்றச்சாட்டை மறுத்து பாகிஸ்தான் விளக்கம் அளித்துள்ளது.
 | 

புல்வாமா தாக்குதலில் எங்களுக்கு தொடர்பில்லை - வல்லரசு நாடுகளிடம் பாகிஸ்தான் விளக்கம்

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், வல்லரசு நாடுகளின் தூதர்களிடம் விளக்கம் அளித்துள்ளது.

முன்னதாக, புல்வாமா தாக்குதலை நடத்திய ஜெய்ஷ்-ஏ-அகம்மது தீவிரவாத இயக்கம் குறித்தும், அவர்களை ஆதரிப்பதில் பாகிஸ்தான் அரசுக்கு இருக்கும் பங்கு குறித்தும் 25 நாடுகளின் தூதர்களிடம் டெல்லியில் இந்திய அரசு சார்பில் நேற்று விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. குறிப்பாக, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் வீட்டோ அதிகாரம் கொண்ட வல்லரசு நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் தூதர்களிடம் இந்தியா தனது புகார்களை தெரிவித்திருந்தது.

இந்நிலையில், அந்த வீட்டோ நாடுகள் சார்பாக பாகிஸ்தானில் உள்ள தூதர்களை, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செயலாளர் தெஹ்மினா ஜான்ஜுவா நேற்றிரவு சந்தித்துப் பேசினார். அப்போது, புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானை தொடர்புபடுத்தும் இந்தியாவின் குற்றச்சாட்டை மறுத்து விளக்கம் அளித்தார் அவர். மேலும், எந்தவித விசாரணைகளும் இன்றி, பாகிஸ்தானை குற்றம்சாட்டுவதை இந்தியா வழக்கமாகக் கொண்டுள்ளது என்றும் வல்லரசு நாட்டுத் தூதர்களிடம் தெஹ்மினா தெரிவித்தார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP