மதத்தின் பேரில் இந்துக்கள் மீதான வன்முறை: பாகிஸ்தானில் போராட்டம்

பாகிஸ்தானில் மதத்தின் பேரில் இந்துக்கள் மீது நடத்தப்படும் வன்முறையை கண்டித்து, கராச்சி நகரில் போராட்டங்கள் வெடித்துள்ளன. நம்ரித்தா சாந்தினி என்ற பெண்ணின் இறப்பே இப்போது வெடித்துள்ள போராட்டத்திற்கு காரணமாகும்.
 | 

மதத்தின் பேரில் இந்துக்கள் மீதான வன்முறை: பாகிஸ்தானில்  போராட்டம்

பாகிஸ்தானில் மதத்தின் பேரில் இந்துக்கள் மீது நடத்தப்படும் வன்முறையை கண்டித்து, கராச்சி நகரில் போராட்டங்கள் வெடித்துள்ளன. நம்ரித்தா சாந்தினி என்ற பெண்ணின் இறப்பே இப்போது வெடித்துள்ள போராட்டத்திற்கு காரணமாகும்.

சமீப காலமாக பாகிஸ்தானில் மதத்தின் பேரில் இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களினால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. தற்போது சாந்தினி என்ற சிந்தி இளம் பெண்ணின் உயிரிழப்பு மக்களின் கோபத்தை அதிகரித்து போராட்டத்திற்கு வழிவகுத்துள்ளது. சமீபத்தில் இந்துக் கோவில் சூறையாடப்பட்ட கோட்கி நகரத்தை சேர்ந்த இவர், பல் அறுவை சிகிச்சையில் இளங்கலை பட்டம் படித்துக்கொண்டிருந்தார்.

இந்நிலையில் கல்லூரி விடுதியில், சாந்தினி  கழுத்தில் துணி வைத்து இறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். போலீசார் இதனை தற்கொலையாக இருக்கும் எனக் முடிவு செய்த நிலையில், மருத்துவ ஆலோசகரான அவரது சகோதரர், சாந்தினியின் கை,கழுத்து பகுதிகளில் கேபிலினால் இறுக்கப்பட்ட தடயங்கள் இருப்பதாகவும் எனவே இது தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை எனவும் கூறியதையடுத்து, போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

சாந்தினியின் கொலை நடப்பதற்கு முன்தினம், கோட்கியில் உள்ள ஒரு பள்ளி தலைமை ஆசிரியர் இஸ்லாமியர்களை கட்டாய மதமாற்றம் செய்வதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். மேலும், அங்கிருந்த இந்துக் கோவில் சூறையாடப்பட்டது. இதற்கு மறுதினம் இந்த கொலை சம்பவம் நடந்திருப்பதால், கொதித்தெழுந்த பாகிஸ்தான் மக்கள், இந்துகளுக்கு ஏற்படும் மத தாக்குதல்களுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். 

பாகிஸ்தான் மனித உரிமை ஆணையத்தின் கணக்கெடுப்பின்படி, ஜனவரி 2004 முதல் மே 2018 வரை 7430 சிந்தி இனத்தைச் சேர்ந்த பெண்கள் மத தாக்குதலின் பேரில் கொல்லப்பட்டிருப்பது அந்நாட்டின் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது போன்ற பல சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில், சாந்தினியின் இறப்பு எதிர்த்து போராடும் உணர்வை தூண்டியுள்ளது.

இந்த மாத இறுதியில் ஐக்கிய நாடுகளின் பொது சபை கூட்டம் நடக்கவுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இந்தியா திரும்ப பெற்றது நியாயமில்லை எனக் கூறிய பாகிஸ்தானுக்கு, இப்போராட்டம் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP