பயங்கரவாத தாக்குதலுக்கு அமெரிக்காவே காரணம்: இம்ரான்கான்!

ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் வெற்றிபெறாததற்கு பாகிஸ்தான் மீது அமெரிக்கா பழி சுமத்துவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் குற்றம்சாட்டியுள்ளார்.
 | 

பயங்கரவாத தாக்குதலுக்கு அமெரிக்காவே காரணம்: இம்ரான்கான்!

ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் வெற்றிபெறாததற்கு  பாகிஸ்தான் மீது அமெரிக்கா பழி  சுமத்துவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக சமீபத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர்  இம்ரான்கான் கூறியதாவது: 80 களில் சோவியத் யூனியன் பிடியிலிருந்து ஆப்கானிஸ்தானை விடுவிப்பதற்காக முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பை பாகிஸ்தான்  உருவாக்கியதாகவும், அந்த அமைப்பிற்கான நிதி உதவியை அன்றைய காலகட்டத்தில் அமெரிக்காவின் சிஐஏ தான் அளித்து வந்ததாக தெரிவித்துள்ளார். 

ஆனால் தற்போது ஆப்கானிஸ்தானில் தங்களுக்கு சொந்தமான ராணுவப்படைகள் இருப்பதால் பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா செயல்படுகிறது. இவ்வாறு அமெரிக்காவின் முரண்டப்படட செயல்பாடுகளால் பயங்கரவாதிகள் பாகிஸ்தானை தாக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் 70ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களையும், 100பில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதாரத்தையும் பாகிஸ்தான் இழந்துள்ளதாக பிரதமர் இம்ரான்கான் குற்றம் சாட்டியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP