நிதி நெருக்கடியில் தத்தளிக்கும் பாகிஸ்தானுக்கு உதவிக்கரம் நீட்டிய ஐக்கிய அரபு அமீரகம்

பாகிஸ்தானிடம் டாலர் இருப்பு கடுமையாக குறைந்துள்ளது. இதன் காரணமாக, சர்வதேச அளவிலான பரிவர்த்தனைகளை எதிர்கொள்ள முடியாமல் அந்நாடு திணறி வருகிறது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் அந்நாட்டுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
 | 

நிதி நெருக்கடியில் தத்தளிக்கும் பாகிஸ்தானுக்கு உதவிக்கரம் நீட்டிய ஐக்கிய அரபு அமீரகம்

நிதி நெருக்கடியை சந்தித்துள்ள பாகிஸ்தானுக்கு ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் ரூ.21,360 கோடி (இந்திய மதிப்பு) நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே நேற்று கையெழுத்தானது.

பாகிஸ்தானிடம் டாலர் இருப்பு கடுமையாக குறைந்துள்ளது. இதன் காரணமாக, சர்வதேச அளவிலான பரிவர்த்தனைகளை எதிர்கொள்ள முடியாமல் அந்நாடு திணறி வருகிறது. அதே சமயம், சர்வதேச செலாவணி நிதியத்தின் கட்டுப்பாடுகளையும் பாகிஸ்தான் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்நிலையில், பாகிஸ்தானுக்கு நிதியுதவி அளிக்க சவூதி அரேபியா முன்வந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடந்த மாதம் கத்தார் சென்றிருந்தபோது, ஐக்கிய அரபு அமீரகத்தின் உதவியை நாடியிருந்தார்.

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அங்கமான அபு தாபி சார்பில், பாகிஸ்தானுக்கு ரூ.21,360 கோடி நிதியுதவி அளிப்பதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. ஸ்டேட் பாஃங் ஆஃப் பாகிஸ்தான் தலைவர் தரீக் பாஜ்வா, அபுதாபி வளர்ச்சி நிதி அமைப்பின் இயக்குநர் முஹம்மது சையீப் அல் சுவைதி ஆகியோர் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP