100 நாள்களில் இம்ரான் கான் சாதித்தது இதுதான்!

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்று 100 நாள்கள் நிறைவடைந்த நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான அந்த நாட்டு ரூபாயின் மதிப்பு வெள்ளிக்கிழமையன்று, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 144 ரூபாய் அளவுக்கு கடும் சரிவை சந்தித்துள்ளது.
 | 

100 நாள்களில் இம்ரான் கான் சாதித்தது இதுதான்!

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்று 100 நாள்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான அந்த நாட்டு நாணயத்தின் மதிப்பு வெள்ளிக்கிழமையன்று, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 144 ரூபாயாக கடும் சரிவை சந்தித்துள்ளது.

பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருவதன் காரணமாக பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து கடும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில்,கடந்த  ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான், "நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த, புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என்று உறுதியளித்திருந்தார்.

ஆனால், அவர் பிரதமராக பொறுப்பேற்று வெள்ளிக்கிழமையுடன் 100 நாள்கள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் நாணயத்தின் மதிப்பு 144 ரூபாய் என்ற அளவுக்கு கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் அந்நாட்டின் பொருளாதார கடும் நெருக்கடிக்கு ஆளாகும் சூழல் உருவாகியுள்ளது.

'நாட்டின்  பணமதிப்பு சரிவு முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தியாக இருக்க முடியாது.சர்வதேச செலாவணி நிதியத்திடம் பேசி, இந்த பொருளாதார அதிர்ச்சியிலிருந்து நாட்டை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று பாகிஸ்தான் ஸ்டேட் பாங்க்கின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் பாகிஸ்தான் நாட்டிற்கு  உதவுவது குறித்து கருத்து தெரிவித்திருந்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்தாதவரை அந்த நாட்டுக்கு உதவி செய்ய முடியாது என திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.

அதுமட்டுமின்றி  பாகிஸ்தானுக்கு உதவ வேண்டுமெனில், தான் விதிக்கும் கடும் நிபந்தனைகளை நடைமுறைக்கு கொண்டு வந்தால் மட்டுமே உதவத் தயாராக இருப்பதாக சர்வதேச செலாவணி நிதியம் அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP