இரு நாடுகளுக்கிடையேயான பிரச்சனை அணு ஆயுத போருக்கே வழிவகுக்கும் - இம்ரான் கான் 

அணு ஆயுதங்கள் கொண்ட இரண்டு நாடுகளுக்குமிடையே வழக்குகளும், சச்சரவுகளும் தொடரும் நிலையில், அது அணு ஆயுத போருக்கே வழிவகுக்கும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
 | 

பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், "நாங்களாக போர் தொடங்க மாட்டோம், போரினால் எந்த பிரச்சனைகளையும் தீர்க்க இயலாது. எனினும், அணு ஆயுதங்கள் கொண்ட இரண்டு நாடுகளுக்குமிடையே வழக்குகளும், சச்சரவுகளும் தொடர்ந்து நடக்கும் நிலையில், அது அணு ஆயுத போருக்கே வழிவகுக்கும்" என கூறினார். 

மேலும் கூறுகையில், "இந்தியா காஷ்மீருக்கு செய்திருக்கும் அநியாயத்தை தட்டிக் கேட்டால், தீவிரவாதத்தை நாங்கள் தூண்டுவதாக பாகிஸ்தானைக் குற்றம் சாட்டுகின்றனர். காஷ்மீர் குறித்த விவகாரத்தை பேசி தீர்ப்போம் என்று நினைத்தால், நிதி நடவடிக்கை குழு மூலம் எங்களுக்கு பொருளாதார ரீதியாக சிக்கல்கள் ஏற்படுத்துகின்றனர்".

அணு ஆயுதங்கள் கொண்ட இரு நாடுகளுக்குமிடையே இந்நிலை தொடருமாயின், அது இரு நாடுகள் மட்டுமின்றி மொத்த நாடுகளையும்  பாதிக்கும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP