ஆர்எஸ்எஸ் பெயரை உலக அளவில் எடுத்துச்சென்ற இம்ரானுக்கு நன்றி: கிருஷ்ண கோபால்

"பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பெயரை உலகளவில் எடுத்துச் சென்றுள்ளார். அதற்கு நாம் அவருக்கு நன்றி கூற வேண்டும்" என கிருஷ்ண கோபால் கூறியுள்ளார்.
 | 

ஆர்எஸ்எஸ் பெயரை உலக அளவில் எடுத்துச்சென்ற இம்ரானுக்கு நன்றி: கிருஷ்ண கோபால்

"பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பெயரை உலகளவில் எடுத்துச் சென்றுள்ளார். அதற்கு நாம் அவருக்கு நன்றி கூற வேண்டும்" என கிருஷ்ண கோபால் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பொது கூட்டத்தில் உரையாடிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், 2013 இல் சுஷில் குமார் ஷிண்டே ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளை உருவாக்குவதாக கூறியிருந்ததை குறிப்பிட்டு, அடால்ப் ஹிட்லர் மற்றும் பென்னிட்டொ முசோலினி ஆகியோரை பின்பற்றியே ஆர்.எஸ்.எஸ்  அமைப்பு செயல்படுகிறது எனக் கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் துணைச் செயலாளர் கிருஷ்ண கோபால், "ஆர்.எஸ்.எஸ் இந்தியாவில் மட்டும் தான் உள்ளது. எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது. பாகிஸ்தான் ஆர்.எஸ்.எஸ் மீது கோபம் கெள்வதற்கான காரணம் என்ன? பாகிஸ்தானுக்கு இந்தியா மீதுள்ள கோபம் தானே, அதன் பிரதமரை, அந்த மாபெரும் மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ் பற்றி குறிப்பிட வைத்தது. அப்படியென்றால், ஆர்.எஸ்.எஸ்-ம் இந்தியாவும் ஒன்று என்பது தானே அர்த்தம்.

ஆகையால், இம்ரான் சாஹிப், நமக்கு நல்லதுதான் செய்துள்ளார். நமது பெயரை உலக நாடுகள் அனைத்திற்கும் தெரிய படுத்தியுள்ளார். அவருக்கு நாம் நன்றி தான் கூற வேண்டும். இது போல அவர் எல்லா இடத்திலும் நமது பெயரை உபயோகிக்குமாறு நான் அவரிடம் கேட்டுக் கொள்கிறேன் உலக நாடுகளும்,பாகிஸ்தான் பிரதமரை பின்பற்றி, இந்தியாவையும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பையும் ஒன்றாக பார்க்க வேண்டும் என்பதே என் விருப்பம்" என்று கூறினார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP