எல்லை சாலைக்கு அடிக்கல் நாட்டு விழா: பாகிஸ்தான் அழைப்பை நிராகரித்த சுஷ்மா!

குர்தாஸ்பூர் அருகே குருநானக் சமாதி செல்வதற்கான, கர்தார்பூர் சிறப்பு பாதை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள பாகிஸ்தான் விடுத்த அழைப்பை ஏற்க மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மறுத்து விட்டார்.
 | 

எல்லை சாலைக்கு அடிக்கல் நாட்டு விழா: பாகிஸ்தான் அழைப்பை நிராகரித்த சுஷ்மா!

குர்தாஸ்பூர் அருகே குருநானக் சமாதி செல்வதற்கான, கர்தார்பூர் சிறப்பு பாதை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள பாகிஸ்தான் விடுத்த அழைப்பை ஏற்க மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மறுத்து விட்டார்.

சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக் தேவின் சமாதியான கர்தார்பூர் சாஹிப் பாகிஸ்தானில் சர்வதேச எல்லையை ஒட்டி ராவி நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்த சமாதிக்கு செல்வதை சிக்கியர்கள் மிகவும் புனிதமாக கருதுகின்றனர். ஆனால் பாகிஸ்தான் எல்லையில் சமாதி இருப்பதால் சீக்கியர்களால் இங்கு அதிகளவில் செல்ல முடிவதில்லை.  

இதனிடையே குருநானக் தேவின் 550வது பிறந்த ஆண்டு, விழாவாக கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் அதனை சிறப்பிக்கும் வகையில் பாகிஸ்தானில் உள்ள குருநானக் சமாதிக்கு, சீக்கியர்கள் எளிதாக செல்லும் வகையில், பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூர் மாவட்டம், தேரா பாபா நானக் நகரிலிருந்து, சர்வதேச எல்லை வரை சிறப்பு பாதை அமைக்க பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

இந்த பாதை அமைக்கப்பட்டதும், குருநானக் சமாதிக்கு, சீக்கியர்கள் ஆண்டு முழுவதும் செல்லலாம். பாகிஸ்தான் எல்லையிலிருந்து கர்தார்பூர் வரை சாலை அமைக்க பாகிஸ்தானும் ஒப்புதல் வழங்கியது. 

சுஷ்மாவுக்கு அழைப்பு: 

இதற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் நவம்பர் 28ம் தேதி கர்தார்பூரில் நடக்க உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள வருமாறு மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், சித்து ஆகியோருக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெக்மூத் குரோஷி அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்பை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நிராகரித்து விட்டார். அவருக்கு பதிலாக இந்தியத் தரப்பின் சார்பில் மத்திய அமைச்சர்கள் ஹரிச்மராத் கவுர் பாதல் மற்றும் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் செல்ல உள்ளனர். 

காஷ்மீர் விவகாரத்துக்கு பாகிஸ்தானில் கண்டன தீர்மானம்

இந்தியாவின் பொறுமையை சோதிக்கிறது பாகிஸ்தான்: நிர்மலா சீதாராமன்

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP